மாநிலம் சென்னை

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு காலமானார் : மமக. இரங்கல்

by puthiyavanadmin on | 2024-05-13 08:59:09

Share: | | |


நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு காலமானார் : மமக. இரங்கல்

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள  இரங்கல் அறிக்கை: 

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் செல்வராசு அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

6 முறை நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 3 முறை வெற்றி பெற்றவர்.

சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டதோழர் எம்.செல்வராசு அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செயலாற்றியவர். 

பல்வேறு மக்கள் போராட்டங்களில் முன் நின்று நடத்திக் காட்டியவர். உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியைத் தீவிரமாகச் செய்தவர். அர்ப்பணிப்போடு சேவை செய்வதில் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். 

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek