மாநிலம் சென்னை

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

by puthiyavanadmin on | 2024-05-03 21:57:48

Share: | | |


மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் வயது மூப்பு காரணமாக மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். எழுபது ஆண்டுகள் இதழியல் துறையில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.இவரது மறைவு அச்சு ஊடகத்திற்கு மிகப்பெரிய இழப்பு.

தமிழ் படைப்புலகில் பெறும் வரவேற்பைப்பெற்ற "வரலாற்றுச் சுவடுகள்" எனும் நூலையும் "ஒரு தமிழன் பார்வையில் 20 ஆம் நூற்றாண்டு வரலாறு","கற்காலம் முதல் கம்யூட்டர் காலம் வரை"உள்ளிட்ட பல்வேறு நூல்களை வழங்கியவர்.

நாதன் என்ற பெயரில் பல்வேறு நாவல்களையும் எழுதியுள்ளார்.

ஊடகத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2021 ஆம் ஆண்டின் கலைஞர் எழுதுகோல் விருது பெற்ற பெருமைக்குரியவர்.

சுறுசுறுப்பாகப் பணி செய்த இவர் இளம் பத்திரிகையாளர்களுக்குச் சிறந்த ஊக்கமளிப்பவராக திகழ்ந்தார்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek