மாவட்டச் செய்தி கோவில்பட்டி

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி - யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன்

by puthiyavanadmin on | 2024-01-18 14:08:15

Share: | | |


மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி - யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் ஹாக்கி மைதானத்தில் யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாவட்ட அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்றது.

இதில் மொத்தம் 15 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்,கோவில்பட்டி ஹாக்கி கிளப் அணிகள் தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் 4 -0 என்ற கோல் கணக்கில் யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கும், இரண்டு மூன்று நான்காவது இடங்களை பிடித்த அணிகளுக்கும் சுழற் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

video Link -sports

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek