மாநிலம் சென்னை

மண்ணின் மைந்தர்கள் கழகம் நடத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மாநாடு : ஜனவரி 31 ல் நடக்கிறது!.

by puthiyavanadmin on | 2024-01-13 09:53:21

Share: | | |


மண்ணின் மைந்தர்கள் கழகம் நடத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மாநாடு : ஜனவரி 31 ல் நடக்கிறது!.

மண்ணின் மைந்தர்கள் கழகம் நடத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மாநாடு வருகின்ற ஜனவரி 31 ம் தேதி நடைபெற இருப்பதாக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஆ.சா.செல்வராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேனாதிபதியின் விண்ணுக்கும், மண்ணுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மாநாடு வருகின்ற ஜனவரி 31 ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும், மாநாட்டில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பதுடன் 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி இனம் பாகுபாடு இன்றி கலந்து கொள்ளும்படியும் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஆ.சா.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லியில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜான் பிர்லாவை நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை அளித்த மண்ணின் மைந்தர்கள் கழகம் தலைவர் டாக்டர் ஆ.சா.செல்வராஜ் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek