மாநிலச் செய்தி மதுரை

மதுரை ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 23 ம் தேதி திறப்பு : அமைச்சர் மூர்த்தி தகவல்

by puthiyavanadmin on | 2024-01-08 13:03:35

Share: | | |


மதுரை ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 23 ம் தேதி திறப்பு : அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சுமார் 5000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு அரங்கு கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி இந்த ஜல்லிக்கட்டு மைதானத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கியது. சுமார் 66.8 ஏக்கரில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. 
ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23ம் தேதி அல்லது 24 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்க இருக்கிறார் என பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek