தேசியம் டெல்லி

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

by puthiyavanadmin on | 2024-01-08 11:38:17

Share: | | |


பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-இல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில், ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, வன்முறையாளர்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். பானுவின் மூன்று வயது பெண் குழந்தை உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

தண்டனை காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே இந்தச் சம்பவத்தோடு தொடர்பபைய குற்றவாளிகள் 11 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து பல்வேறு பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் அக்டோபர் மாதம் நடைபெற்றது. அப்போது, பில்கிஸ் பானு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷோபா குப்தா, 'வன்முறையாளர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் ஒரு சகோதரி போல பில்கிஸ் பானு கெஞ்சியுள்ளார். கொலை செய்யும் அவரைத் முஸ்லிம்களைக் 'ரத்த வெறி' யுடன் துரத்திச் வன்முறையாளர்கள், சென்ற அந்த மதத்தினருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

மன்னிக்க முடியாத இது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை முன்கூட்டியே விடுவிப்பது தவறான செய்தியை சமூகத்தில் விதைப்பதாக ஆகும் என சிபிஐ தெரிவித்துள்ளது' ' என்றார். பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டிருந்தது.

இன்று அளிக்கப்பட்ட அதிரடியான தீர்ப்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை கடந்தாண்டு முன்கூட்டியே குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது தவறானது எனக் கூறி, அனைவரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek