மாநிலம் சென்னை

விஜயகாந்த் வீர சகாப்தம் முடியவில்லை...! தொடங்குகிறது...!!

by puthiyavanadmin on | 2023-12-30 09:41:11

Share: | | |


விஜயகாந்த் வீர சகாப்தம் முடியவில்லை...! தொடங்குகிறது...!!

ஒருத்தர் இருக்கும்போது அருமை பெருமை பேசாதவங்க... அவர் மரணிக்கும் போது சும்மா பேச்சுக்கு அவர் வல்லவரு...நல்லவருன்னு ஏதோ பேசிட்டு போவாங்க...ஆனா... அப்படி அல்ல கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.

அவர் நல்லவரா வாழ்ந்தார்ங்கறதுக்கு தமிழக மக்கள் கொடுத்த 2 நாள் சாட்சி கண் கலங்காதவர்களையும் கலங்க வைத்தது.

மனுஷன் யாருமே பசியோட இருக்க கூடாதுங்கற விசயத்துல தெளிவா வாழ்ந்துருக்காரு... அவரோட எண்ணம் நிறைவேறுங்கற அடிப்படைல தமிழத்தின் எதிர்க் கட்சித் தலைவராகவும் வாழ்ந்து காட்டிட்டாரு....

இருந்தாலும் அரசியல்ல அவரோட எண்ணத்த நிறைவேற்ற விடாம தடுக்கிறாங்க... அப்படிங்கறது தான் அவரோட எரிச்சலுக்கு காரணமே...

மன உலைச்சலுக்கும் ஆளாக காரணமா அமைஞ்சது. நாக்கை துருத்தினார். தூன்னு துப்பினார்ன்னு ஊடகங்களும் விஜயகாந்த் அவர்களை வளர விடல...

வாழ விடல... இன்னைக்கு அவர் இறந்ததுக்கு அப்புறமா போட்டி போட்டு (சம்பாதிக்கறதுக்காக) லைவ்ல காட்டினாங்க...

விஜயகாந்த் அவர்கள் எண்ணம் ஈடேராமல் போனதற்கு காரணம், அவருடன் வளர்ந்த அரசியல் புள்ளிகள் கட்சி மாறியதையும் அவரால் தாங்க முடில.

2014 தேர்தலுக்காக அவருடன் கூட்டணி அமைக்க பிரதமர் நரேந்திரமோடியே துண்டு போட்டு காத்திருந்ததை யாராலும் மறக்க இயலாது.

அந்தளவுக்கு வளர்ந்த தேமுதிக தேர்தல் காலத்தில் கூட்டணி கட்சியினரை பாடாய் படுத்திய சம்பவம் சருக்கலை ஏற்படுத்தியதாக கருதலாம். இதற்கெல்லாம் கேப்டன் காரணமாக இருந்திருப்பாரா எனவெல்லாம் மக்கள் ஆலோசிக்க தொடங்கினார்கள்.

கேப்டன் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடியே நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாம். இருந்தாலும் தமிழகம் வரும்போது நிச்சயம் குடும்பத்தினரிடம் ஆறுதல் கேட்க வாய்ப்பு இருக்கிறது.

அரசியலுக்கு வராமல் சினிமாவிலேயே இருந்திருக்கலாம் என பலரும் பேசும் அளவுக்கு திரைத்திறையை தூக்கி நிறுத்திக் காட்டிய விஜயகாந்த் அவர்களின் எண்ணம் ஈடேர திரைத்துறையினரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும். சினிமாவில் பணியாளர்களுக்கிடையே வேற்றுமை பாராமல் திரைத்துறையை வளம்பெறச் செய்ய வேண்டும்.

விஜயகாந்த் அவர்களின் கனவில் கேப்டன் டிவியை உயிராக நேசித்தார். இவர் உயிரிழந்ததாலோ எண்ணவோ, உங்களை என் கண்ணால் காட்டுவதா என்ற எண்ணத்திலோ எண்ணவோ,... கேப்டன் டிவியும் இயங்கவில்லை.

விஜயகாந்த் அவர்கள் எண்ணம் ஈரேட கேப்டன் டிவி மீண்டும் இயங்க வேண்டும். கட்சியில் நிலையான இளைஞர்களை புதிய நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். 

விஜயகாந்த் அவர்களின்  வீரசகாப்தம் முடியவில்லை...தொடங்குகிறது என்ற எண்ணத்தை உருவாக்குவதில் பிரேமலதா அவர்களின் செயல்பாடுதான் முக்கிய காரணமாக அமையும்.

க.செய்யது அப்துல் கனி, ஆசிரியர்,புதியவன்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek