மாவட்டம் சென்னை

பெருமாள் கோவில் தெரு அருகில் மதுபானக்கடை திறப்பதா? போராட்டம் நடத்திய மதுரவாயல் மக்கள்

by puthiyavanadmin on | 2023-12-26 17:15:42

Share: | | |


பெருமாள் கோவில் தெரு அருகில் மதுபானக்கடை திறப்பதா?  போராட்டம் நடத்திய மதுரவாயல் மக்கள்

சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் தெரு அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினரே போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில் புதிதாக மதுபானக்கடை (கடை எண்- 8937) திறக்க இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க கூடாது எனவும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆளும் கட்சியினருடன் மதுரவாயல் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர். பெருமாள் கோவில்தெரு பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை அமையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

போராட்டம் வீடியோ ...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek