மாநிலச் செய்தி சேலம்

பெண் பயணிகளிடம் ஜாதியை கேட்கலாமா?, போன் நம்பர் கேட்பதும் நியாயமா? - எடப்பாடியார் கேள்வி

by puthiyavanadmin on | 2023-11-29 21:38:43

Share: | | |


பெண் பயணிகளிடம் ஜாதியை கேட்கலாமா?, போன் நம்பர் கேட்பதும் நியாயமா? - எடப்பாடியார் கேள்வி

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று முடிந்த பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்து செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

டெங்கு காய்ச்சல் நன்னீரில் உள்ள கொசுக்கள் மூலம் பரவுகிறது. மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை அப்புறப்படுத்த உள்ளாட்சித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்த வேண்டும். ஆனால் அதை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிப்பதுதான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் வாடிக்கையாகி விட்டது .

பெண் பயணிகளிடம் ஜாதியை கேட்கலாமா?- Vedio

போக்குவரத்துத் துறையில் நகரப்பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சாதியைக் குறிப்பிட்டு, தொலைபேசி எண்களை கேட்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக தேர்தல் அறிக்கையில் நகரப் பேருந்துகள் அனைத்திலும் இலவச பயணம் என வாக்குறுதி அளித்து விட்டு, இன்றைக்கு ஒரு சில பேருந்துகளில் மட்டுமே இலவச பயணம் அளிக்கப்படும் தந்திர மாடலாக திமுக ஆட்சி உள்ளது. இதில் பயணம் செய்யும் மகளிரை சாதியின் பெயரைக் கேட்பது, தொலைபேசி எண்ணைக் கேட்பது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். இனிமேலாவது எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துக்களை ஆராய்ந்து உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.
 
திமுக அரசு அற்புதமான பொங்கல் பரிசு கொடுத்தார்கள், அண்டை மாநிலத்தில் வெல்லம் வாங்கி மிகப்பெரிய முறைகேடு நடந்தது. மக்களுக்கு மறக்க முடியாத பொங்கல் தொகுப்பாக அமைந்து விட்டது. இனிமேலாவது முறையான பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
 
சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறை சில விரும்ப தகாத நிகழ்வுகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் வந்தபோது முதல்வர் டெல்டாகாரன் என்றார். ஆனால் முறையாக தண்ணீர் கொடுத்தால் மட்டுமே டெல்டாகாரன் என்பது பொருந்தும். முறையாக தண்ணீரை கணக்கிடாமல் அரசு திறந்துவிட்டதால் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. ஆனால் உரிய நீர் கிடைக்காததால் ஒன்றரை லட்சம் ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்ய முடிந்தது. மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டது என்றார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek