தேசியம் டெல்லி

41 பேரும் மீட்பு- மலைபோல் நம்பியிருந்த அர்னால்ட்க்கு கிடைத்த வெற்றி

by puthiyavanadmin on | 2023-11-29 12:56:57

Share: | | |


41 பேரும் மீட்பு- மலைபோல் நம்பியிருந்த அர்னால்ட்க்கு கிடைத்த வெற்றி

உத்திரகண்ட் நிலச் சரிவில் சிக்கிய 41 பேரைக் காப்பாற்றிய பெரும் பணியில் முக்கிய மூளையாக திகழ்ந்தவர் அர்னால்ட் டிக்ஸ் .

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவர். புவியியலாளர், பொறியாளர் மற்றும் வழக்கறிஞராகவும் செயல்பட்டு வருகிறார். கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் சொன்னதுபோலவே கிறிஸ்துமஸுக்குள் 41 தொழிலாளர்களும் வீடு திரும்பியுள்ளனர், யாருக்கும் சேதம் இல்லை. கிறிஸ்துமஸ் முன்பாகவே வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுக்கு என்ன வேண்டுமென்பது தெரியும்: அதனால் நாங்கள் நிதானமாக இருந்தோம். ஒரு குழுவாகச் சிறப்பாகச் செயலாற்றியுள்ளோம். இந்தியாவில் சிறந்த பொறியாளர்கள் உள்ளனர். இந்த வெற்றிகரமான மீட்புப் பணியில் அங்கம் வகித்த. மகிழ்வுக்குரியதாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மீட்புப் பணியின்போது பேட்டி அளித்த அவர், மலை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. 41 பேரையும் தாயைப் போல அது பாதுகாக்கும், எந்தவிதத்திலும் காயம் ஏற்படுத்தாது. சுரங்கத்துக்குள் பாதுகாப்பாகவே இருப்பார்கள். எப்போது எந்த வழியாக அவர்களை வெளியே அனுப்புவதென மலை தீர்மானிக்கும் "எனத் தெரிவித்திருந்தார். அவர் மலைமேல் வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. 41 பேரும் மீட்கப்பட்டனர்.
 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek