மாநிலம் சென்னை

நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா? வெளிநாட்டிலா?...

by puthiyavanadmin on | 2023-11-26 09:32:17

Share: | | |


நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா? வெளிநாட்டிலா?...

நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா? வெளிநாட்டிலா?... என எண்ணத் தோன்றுகிறது.

அரசாங்கமும் ஏன் இந்த விசயத்தில் மெத்தனம் காட்டுகிறது.

பல மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தப்பதை (செல்லாது)  எப்படி ஏற்க முடியும்.

சேலம் சென்றிருந்தபோது, 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தவுடன் ஏற இறங்க பார்த்த நடத்துநர் நாணயத்தை ( செல்லாது... செல்லாது...என்ற தொனியில்)  வாங்க மறுக்கிறார்.

இதே நிலை தான் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். நாம் என்ன இந்திய நாட்டில் தானே இருக்கிறோம். ஏன் இந்தநிலை என எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தில் தென்மாவட்டங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கப்படும் 10 ரூபாய் நாணயம் கொங்கு மண்டலங்களில் ஏன் வாங்கப்படுவதில்லை. 

முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே 10 ரூபாய் நாணயம் வாங்கப்படுவதில்லை (செல்லாது) என்பதை எப்படி ஜீரணித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் இதை ஏன் வேடிக்கை பார்த்து பணப்புழக்கத்தை கேலிக் கூத்தாக்குகிறார்கள் எனத் தெரியவில்லை.

பரிதாபத்தில் மக்கள் ... பத்து ரூபாய் நாணயத்தை சென்னை கொண்டு வந்தால் மட்டுமே மாற்றும் நிலையில் இருக்கின்றனர்.

அரசு உடனடி நடவடிக்கை தேவை...!

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek