தேசியம் பெங்களுரு

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் நரேந்திரமோடி

by puthiyavanadmin on | 2023-11-26 07:59:37

Share: | | |


தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் நரேந்திரமோடி

இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் 'தேஜஸ்' இலகு ரக போர் விமானங்கள், இன்ஜின், உதிரி பாகங்கள் தயாரிக்கபபட்டு வருகிறது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் எச்.ஏ.எல் நிறுவனம் அண்மையில் 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானத்தை தயாரித்தது. இந்த விமானம் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. பெங்களூருவில் பிரதமர் மோடி அந்த விமானத்தை பார்வையிட்டார். பின்னர் பாதுகாப்பு உடை, பறப்பதற்கான தலைக்கவசம் ஆகியவை அணிந்து, இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் விமானப்படை விமானிகளுடன் பயணித்தார். நடுவானில் பறக்கும் போது கைகளை உற்சாகமாக அசைத்தவாறு, வெற்றி சின்னத்தையும் அவர் காட்டினார்.

போர் விமானத்தில் பறந்த பிரதமர் வீடியோ...Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek