மாநிலம் சென்னை

நவ.25 முதல் பச்சை நிற ஆவின்பால் நிறுத்தமா?- அதிமுக கண்டனம்

by puthiyavanadmin on | 2023-11-21 20:12:57

Share: | | |


நவ.25 முதல் பச்சை நிற ஆவின்பால் நிறுத்தமா?-  அதிமுக கண்டனம்

அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அளித்துள்ள எக்ஸ் பதிவில் பச்சை நிற ஆவின் பால் நிறுத்தம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் சுமார் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்தது. கொழுப்புச் சத்து சமன்படுத்தப்பட்ட நீலநிற பாக்கெட் மற்றும் கொழுப்புச் சத்து சேர்க்கப்பட்ட பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் என்று தமிழகம் முழுவதும் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்தது. ஆவின் நிறுவனம் இலாபத்தில் இயங்கியதோடல்லாமல், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு தலைகீழாக மாறியது. பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பால் கொள்முதல் 20 லட்சம் லிட்டராகக் குறைந்தது. நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் இம்மாதம் 25ந் தேதி முதல் நிறுத்தப்படும் என்று செய்திகள் தெரிய வருகின்றன.

இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து எங்கள் ஆட்சியில் இருந்ததுபோல், ஆவின் பாலையே நம்பியுள்ள தமிழக மக்களுக்கு நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்துகிறேன்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek