விளையாட்டு கிரிக்கெட்

50 வது சதம் - விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

by puthiyavanadmin on | 2023-11-15 20:45:33

Share: | | |


50 வது சதம் - விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 வது சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதி வருகிறது.

போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி 117 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி 50-வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

50 வது சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது விடாமுயற்சி, நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான திறமைக்கு இது ஒரு சான்று எனவும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek