மாநிலச் செய்தி சேலம்

ஏற்காட்டில் கடும் பனி மூட்டம்- இயல்புநிலை பாதிப்பு

by puthiyavanadmin on | 2023-11-14 12:06:26

Share: | | |


ஏற்காட்டில் கடும் பனி மூட்டம்- இயல்புநிலை பாதிப்பு

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மீண்டும் மழை பெய்து வருகிறது. பனிமூட்டம் காரணமாக கடுமையான குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள வீடுகள் முன்பு மலை கிராமவாசிகள்
தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் எப்போதுமே மனதிற்கு இதமான சீதோசன நிலை நிலவும் அவ்வப்போது பனிப்பொழிவும் கடுமையான குளிரும் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர் அதிகரிப்பதால் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்கு உள்ளாய் உள்ளனர் ஏற்காட்டில் தற்போது பெய்து வரும் தொடர்மையும் காரணமாக ஆங்காங்கே செயற்கை நீரூற்றும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை கொட்டி வருகிறது. விடிந்தும் விடாமல் சாரல் மழையாக பெய்து வருகிறது. மழை காரணமாக பனி மூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாரு நகர்ந்து செல்கின்றன. மழை மற்றும் பனி காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

ஏற்காடு மலை பாதையில் பனி மூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன பெரும் ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிர் தாங்கும் உடைகளான சொட்டார் குள்ளா ஜர்கின் போன்ற உடைகளை அணிந்து தான் வெளியே செல்ல முடிகிறது.

இரவில் பெய்த கன மழை காரணமாக மலை பாதையில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. மழை மற்றும் பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்காடு மலை கிராமங்களில் கடும் குளிரையும் தாங்க முடியாத மலை கிராமவாசிகள் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி குளிரில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டு வருகின்றனர் .

மொத்தத்தில் ஏற்காட்டில் பெய்யும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

video Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek