ஆன்மீகம் இஸ்லாம்

அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளலாமா...?

by admin on | 2023-11-10 21:28:29

Share: | | |


அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளலாமா...?

தற்போது தீபாவளி தருணம்.


போனஸ் தருவது அன்பளிப்பு தருவது என ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொள்வதும், மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதும் வரவேற்கத் தக்கதுதான். இதனை அன்றே நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக அறிவிப்பாளர் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடு செய்து வந்தார்கள் . ( நூல் புகாரி-2585 ). எனக் கூறப்படுகிறது.

ஒருவருக்கொருவர் பாசப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில், நபிகள் நாயகம் அன்பளிப்பு செய்யுமாறு நமக்கு கட்டளை யிட்டுள்ளார்கள்.

நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி)- நூல் : அல்அதபுல்முஃப்ரத்-594 ).

ஒருவர் நமக்கு தரும் அன்பளிப்பு ஒரு டீயாகக் கூட இருக்கலாம். அதில் எத்தனை மகிழ்ச்சி இருக்கிறது. மிக விலை உயர்ந்த பொருட்களைத் தான் பெற வேண்டும் என்பது அல்ல அன்பளிப்பு... அதற்கு உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-2568 ) என்றார்கள்.

அன்பளிப்பை ஊக்கப்படுத்தினாலும், பெற்ற அன்பளிப்புக்கு நிகராக நாம் மற்றவர்களுக்கு உபகாரம் செய்யவேண்டும் எனவும் நபிகள் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கொடுத்த அன்பளிப்பை சொல்லிக் காட்டினால் அது கடுமையான பாவம் எனப்படுவதுடன், கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெற நினைப்பவர்கள் பிச்சைக் காரர்களாக கருதப் படுவார்கள் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

அன்பளிப்பு என்ற பெயரில் வரதட்சனை, வட்டி, லஞ்சம் போன்றவை வழங்கப்பட்டு வருவதையும் கண்டிக்கிறார்கள் நபியவர்கள்.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!
(அல்குர்ஆன்: 2:188)

எனவே, தடை செய்யப்பட்ட லஞ்சத்தின் ஈடாகத் தரும் பொருட்களை அன்பளிப்பாக வாங்கவோ, கொடுக்கவோ கூடாது எனவும் இஸ்லாம் மார்க்கத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு- க.செய்யது அப்துல் கனி - புதியவன்.
 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek