உலகம் சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

by admin on | 2023-11-07 14:32:42

Share: | | |


சவுதி அரேபியாவில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

சவுதி அரேபியா இந்திய தூதரகம் சார்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரியாத்தில் நடைபெற்றது.

கலாச்சாரம், இலக்கியம், பாரம்பரியம், பண்பாடு, விருந்தோம்பல், இயற்கை வளம், மனித வளம், தொழில், கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சி என ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு வகையிலான சிறப்புகள் உண்டு.

இந்த சிறப்புக்களை சக இந்திய மக்களுக்கு மத்தியில் போற்றி கொண்டாடவும், பிறருக்கு பரப்பும் வகையிலும் தூதரகம் சார்பில் பிரவாசி பரிச்சை '23 என்கிற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ரியாத் இந்திய தூதரக வளாகத்தில் நடைபெற்றது

தமிழ் நாட்டின் சார்பாக ரியாத்திலுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்று கூடி சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

 

புதியவன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திடுங்கள்...

இந்த சிறப்பான நிகழ்வை இந்திய தூதரகத்தின் தூதுவர் மேதகு மருத்துவர் சுஹைல் ஏஜாஸ் கான் முறைப்படி தொடங்கி வைக்க தூதரகத்தின் அனைத்துமட்ட அதிகாரிகளும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மக்களும் கலந்து கொண்ட நிலையில் தூதரக அரங்கம் முழுவதும் இந்திய மக்களால் நிரம்பி வழிந்தது.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek