மாநிலச் செய்தி தூத்துக்குடி

தூத்துக்குடியில் திருமணமான மூன்றாவது நாளில் காதல் தம்பதி வெட்டி படுகொலை - காரணம் என்ன?

by admin on | 2023-11-03 23:27:59

Share: | | |


தூத்துக்குடியில் திருமணமான மூன்றாவது நாளில் காதல் தம்பதி வெட்டி படுகொலை -  காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை பூர்விகமாக கொண்டவர் வசந்த குமார். இவர் தற்போது தூத்துக்குடி மாநகரில் உள்ள முருகேசன் நகர் 1வது தெருவில் வசித்து வருகிறார். லாரி லோடு மேன் வேலை பார்க்கும் இவர் மனைவி சுமதி தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது ஒரே மகனான மாரி செல்வம் (24), இவர் டிப்ளமோ படித்து விட்டு அருகே உள்ள ஷிப்பிங் (ship) கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் அதில் மூத்த மகள் கார்த்திகா (20), இவர் தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

முத்துராமலிங்கம் மகள் கார்திகாவுக்கும், மாரி செல்வதிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது..கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இது பெற்றோருக்கு தெரிய வர பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இரு வீட்டாருக்கும் அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 1 மாதத்திற்கு முன்பு வசந்தகுமார் குடும்பத்துடன் முருகேசன் நகர் பகுதிக்கு குடியேறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 30ந் தேதி (தேவர் ஜெயந்தி தினமான அன்று) திடீரென மாரி செல்வம்-கார்த்திகா ஆகிய இருவரும் வீட்டை விட்டு ஓடி சொந்த ஊரான கோவில்பட்டியில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், அங்கு உறவினர்கள் வீட்டில் இருந்து வந்த அவர்கள் 02 ம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள முருகேசன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர்.. அப்போது, மாலை 3ம் மைல் பகுதியில் மாரி செல்வத்தை பெண்ணின் சித்தி மகன்களான, கருப்பசாமி பரத், ராஜபாண்டி ஆகிய மூவரும் அரிவாளை கொண்டு வெட்ட முயற்சித்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், மாலை 6:30 மணியளவில் வீட்டில் மாரி செல்வம்-கார்த்திகா ஆகிய இருவரும் இருப்பதை அறிந்த இருந்த அவர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து கணவன்-மனைவியான இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர், அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வர அங்கிருந்து அவர்கள் தப்பியுள்ளனர்.

இதை தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் நகர காவல் துறை கண்காணிப்பாளர் சத்தியராஜ், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வருகை தந்து விசாரணை நடத்தினார். பின்னர், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர், மோப்பநாய் ஜினோ வரவழைக்கப்பட்டது மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து புறப்பட்டு அருகில் இருந்த ரயில்வே கேட் வரை சென்று திரும்பியது ஆனால் யாரையும் பிடிக்கவில்லை.

மேலும் கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த கொலையை செய்தது 5 பேர் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 5 பேர் வந்தார்களா? அல்லது ஆறு பேர் கொண்ட நபர்களா என்பதை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன நிலையில் கணவன்-மனைவி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek