மாநிலச் செய்தி மதுரை

ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சமையல் தொழிலாளர்கள் ஊதிய மறுநிர்யண ஆலோசனைக் கூட்டம்

by admin on | 2023-11-03 16:04:58

Share: | | |


ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சமையல் தொழிலாளர்கள் ஊதிய மறுநிர்யண ஆலோசனைக் கூட்டம்

ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய மறு நிர்ணயம் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற 4 வது ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எச்.எம்.எஸ். சார்பில் ஓட்டல்கள் மற்றும் கேட்டரிங் நல வாரிய உறுப்பினர் முகம்மது ஷாஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் மதுரையில் உள்ள 5 ஹோட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அடுத்த 22 ம் தேதி கோவையில் ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் தொழிலாளர்கள் ஊதிய மறு நிர்ணயம் குறித்த 5 வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக நல வாரிய உறுப்பினர் முகம்மது ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.
 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek