மாநிலம் சென்னை

யாரு கொடுத்த ஐடியாங்க...! சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு சபாஷ் சொல்லியே ஆகணும் ...!!

by admin on | 2023-11-02 12:50:04

Share: | | |


யாரு கொடுத்த ஐடியாங்க...! சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு சபாஷ் சொல்லியே ஆகணும் ...!!

அண்ணாசாலை போக்குவரத்து பயணம் ஆனந்த சாலை போக்குவரத்து பயணமாக மாற்றிய சென்னை போக்குவரத்து காவல்துறையை நகர வாசிகள் வெகுவாக பாரட்டி வருகின்றனர்.

மெட்ரோ ரயில்பணி, மின்சார ரயில் தண்டவாளப்பணி, என பல்வேறு தடங்கல்களால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்தால் திணறிக் கொண்டு பணிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே சென்னை நகரவாசிகளுக்காக தடங்கல் இல்லா போக்குவரத்தை ஏற்பாடு செய்ய நாளொறு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போக்குவரத்து காவல்துறை சுழன்று கொண்டு பணியாற்றிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் சாலைப் போக்குவரத்தில் புதுப்புது மாற்றங்களை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்தில் எளிமையை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து காவல்துறை ஒவ்வொரு நாளும் மூளையைக் கசக்கி பிளிந்து போக்குவரத்து சிக்னல்களை குறைத்து வருகின்றனர்.
அதன்பயனாக தற்போது சென்னை அண்ணாசாலையிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்து விட்டது.

சென்னை நந்தனம், தேனாம்பேட்டை, ஸ்பென்சர் பிளாசா சிக்னல்களின் நேரத்தை குறைத்து பயணிகளின் பாராட்டை பெற்று வருகின்றது சென்னை போக்குவரத்து காவல்துறை.

நந்தனம் சிக்னலை முன்பு கடக்க வேண்டுமானால் குறைந்தது 10 நிமிடம் ஆகிவிடும். இதனால் மன உலைச்சலுடன் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் தற்போது 2 நிமிடத்தில் சிக்னலை கடந்து மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்கின்றனர்.

அடுத்த தலைவலியாக இருந்து வந்த தேனாம்பேட்டை சிக்னலில் கிராஸிங் கிடையாது என்பதால் இப்போது எளிதான பயணத்தை கடக்கின்றனர்.
இருந்தாலும் ஆங்காங்கே திடீர் திடீரென வரும் U TERN களில் ஜாக்கிரதையான பயணத்தை தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

சென்னை தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உயர்மட்டப்பாலம் அமைக்க சுமார் 350 கோடி ஒதுக்கியநிலையில், பணிதொடங்கும் முன்னதாகவே போக்குவரத்து சிக்னல் மாற்றத்தின் மூலம் அதிரடியாய் வாகனநெரிசலைக் குறைத்து அரசுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அடுத்த மிகப் பெரிய சிக்னல் ஸ்பென்சர் சிக்னல். இந்த சிக்னலை மாற்றியமைப்பதற்கும் காவல்துறை மூளையை கசக்கி சரியான திட்டமிடலை உருவாக்கி போக்குவரத்து நெரிசலை குறைத்து விட்டனர்.

அதேபோல்தான் எல்ஐசியிலும் திடீர் திடீரென போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து முணு முணுத்தாலும் அடுத்த நாள் போக்குவரத்து நெரிசல் இல்லாததை கண்டு ஆனந்தமாய் பயணிக்கின்றனர்.

மொத்தத்தில் அண்ணாசாலை போக்குவரத்து பயணம் ஆனந்த சாலை போக்குவரத்து பயணமாக மாறிவிட்டது. இதற்கான திட்டமிடலுக்காக சென்னை போக்கு வரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சபாஷ் சொல்லியே ஆகணும்...

க.செய்யது அப்துல் கனி, முதுநிலைச் செய்தியாளர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek