மாநிலம் சென்னை

மாலத்தீவு கடலோர காவல்படையினர் தருவைக்குளம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் கடிதம்

by admin on | 2023-10-28 13:52:21

Share: | | |


மாலத்தீவு கடலோர காவல்படையினர் தருவைக்குளம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் கடிதம்

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் 23 ம்  தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, அக்டோபர் 1 ம் தேதி  அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில்  மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23 ம் தேதி அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek