மாநிலம் சென்னை

Breaking News: 28 ம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

by admin on | 2023-10-26 15:50:16

Share: | | |


 Breaking News: 28 ம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு விபரம்-

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ரயில் எண் 06033 சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு  வேலூருக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து கனியம்பாடி (10.00 மணி) கண்ணமங்கலம் (10.18 ), ஆரணி சாலை (10.35) ,போளூர் (10.50) , அகரம் சிப்பந்தி (11.03 ), துரிஞ்சபுரம் (11.16 மணி) வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12.05 மணிக்கு சென்றடையும்.

மறுநாள் 29 ம் தேதி ரயில் எண் 06034 திருவண்ணாமலையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடங்கள் வழியாக இரவு 9.05 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.

 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek