மாநிலம் சென்னை

திருச்சி துணைத் தாசில்தாரை தாக்கிய குண்டர்களை கைது செய்ய வேண்டும் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அறிக்கை

by admin on | 2023-10-21 20:15:49

Share: | | |


திருச்சி துணைத் தாசில்தாரை தாக்கிய குண்டர்களை கைது செய்ய வேண்டும் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அறிக்கை

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை விபரம்:

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர், கனரா வங்கியில் 22 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவர்கள் கடனை திரும்ப கட்டாததால், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி, வங்கியில் பெற்ற கடனுக்காக, காஜாமலை பகுதியில் உள்ள சொத்தை திருச்சி மண்டல துணை தாசில்தார் திரு. பிரேம்குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்யச் சென்றபோது, அடையாளம் தெரியாத 20-க்கும் மேற்பட்ட திமுக குண்டர்கள் உருட்டுக் கட்டைகளால் துணை தாசில்தாரையும்,

வங்கி ஊழியர்களையும் சரமாரியாகத் தாக்கியதாகவும், இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த துணை தாசில்தார் மற்றும் வங்கி ஊழியர்கள், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர் சங்கத்தினர், ஜப்தி செய்யச் சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல் துறையினர் இதுவரை கைது செய்யவில்லை என்று தெரிய வருகிறது.

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருச்சி மாவட்ட வருவாய்த் துறை சங்கத்தின் சார்பில் 750-க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணிகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் தெரிய வருகின்றன.

மேலும், உடனடியாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள வருவாய்த் துறை அலுவலர் சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அச்சங்கத்தினர் தெரிவித்ததாக நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துணை தாசில்தாரை, நேரில் பார்க்கச் சென்ற மாவட்ட ஆட்சியர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியும், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன

வருவாய்த் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek