மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி அறிவியல் தொழில்நுட்ப பூங்கா: நவ.14 வரை இலவச அனுமதி...!

by admin on | 2023-10-21 19:50:16

Share: | | |


தூத்துக்குடி அறிவியல் தொழில்நுட்ப பூங்கா: நவ.14 வரை இலவச அனுமதி...!

தூத்துக்குடி அம்பேத்கார் நகரில் திறக்கப்பட்டுள்ள புதிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பூங்காவை நவ.14ம் தேதி வரை இலவச அனுமதி என மேயர் ஜெகன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.28.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பூங்கா மற்றும் நகர் சார் மையத்தினை அக்.8ம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலத்துறை அமைச்சர்ருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன் வளத்துறை அமைச்சருமான அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அக்.21ம் தேதி இன்று அறிவியல் தொழில்நுட்ப கணித பூங்கா செயல்பாடு தொடர்பான விவரங்கள் பொதுமக்களை எளிதில் சென்றடைய ஏதுவாக ஊடகவியலாளர், வலைஒளி, பத்திரிகை தொலைக்காட்சி வாயிலாக வெளிப்படுத்தும் வகையில் அத்துறை சார்ந்த சார்ந்த நிறுவன பிரதிநிதிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் தொழில்நுட்ப கணிதப் பூங்காவில் வைத்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் செயல் விளக்கம் வழங்கப்பட்டது.

மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆணையாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில், தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.28.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பூங்கா மற்றும் நகர் சார் மையத்தினை நவ.14ம் தேதி வரை பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் இலவசமாக சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பிறகு பராமரிப்பு செலவினங்களுக்காக கட்டணம் நிர்ணயம் செய்யப்படவுள்ளதாகவும், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும் எனவும், இங்கு சுற்றிப்பார்க்க வருகை தரும் அனைவரும் இப்பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும் என மேயர் ஜெகன் கேட்டுக்கொண்டார்.

video Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek