மாநிலச் செய்தி சேலம்

கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் ரயில் மறியல்- 50க்கும் மேற்பட்டோர் கைது!

by admin on | 2023-10-21 19:24:56

Share: | | |


 கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் ரயில் மறியல்- 50க்கும் மேற்பட்டோர் கைது!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை வழங்காத கர்நாடகஅரசை கண்டித்தும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை கலைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சேலம் ஜங்ஷன் ரயிலியாம் முன்பு திரண்ட விவசாயிகள் கர்நாடக அரசை கண்டித்து கன்டன கோஷங்களை எழுப்பினர்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் திமுக காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.

தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசுடன் பேசி பெற்று தராத தமிழக அரசை கண்டிப்பதாகவும், மத்திய அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் கர்நாடக அணைகளை கைப்பற்றி துணை ராணுவ உதவியோடு தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கையில் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன .

தொடர்ந்து ரயில் மறியல் ஈடுபட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் மாநில பொருளாளர் ராஜேஷ் நிர்வாகிகள் வேலு நாயக்கர் ராஜேந்திரன் வெங்கடாபதி ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek