மாநிலச் செய்தி சேலம்

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் தனித்து போட்டியிடும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...!

by admin on | 2023-10-20 11:25:13

Share: | | |


 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் தனித்து போட்டியிடும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...!

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

இலங்கைக்கு கப்பல் பயணம் அறிவித்தன்றே தெரியும், அந்த கப்பல் பயணிக்கப் போவதில்லை. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது இன்று நடைபெறுவதில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இலங்கை ராணுவமே சுடுகிறது, வலைகளை அறுத்து செல்கிறது, சொல்லமுடியாத சித்திரவதைகள் செய்து வருகின்றனர். ஆனால் இந்திய நாடும் தமிழக அரசும் எதுவும் கேட்பதில்லை. தமிழன் இறப்பது, அவமானப்படுவது என்றால் சகித்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். பேசிப் பயனில்லை.

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும்.அப்பொழுது மீனவர்கள் மீது கை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம் அவர்களுக்கே தெரியும்.
நாடாளுமன்றத்தில் 39 உறுப்பினர்கள் வைத்திருக்கும் திமுக கடிதம் எழுதவா வைத்துள்ளனர்.

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சியை கண்டித்து, திமுக குறைந்தபட்சம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றதேர்தலில் ஒரு சீட்டு கூட இல்லை என்று கூட்டணியை விலக்கிருக்க வேண்டும்.காங்கிரஸ் தண்ணீர் தரவில்லை என்றாலும் காங்கிரசுக்கு ஓட்டு போடவேண்டும் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் லியோ திரைப்படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே படம் வெளியாகிவுள்ளது. பயப்படவில்லை என்றால் தமிழகஅரசு ஏன் நெருக்கடி கொடுக்கிறது.நடிகர் விஜய்யின் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அப்பொழுது கொடுக்காத நெருக்கடி கொடுப்பதற்கான தேவை என்ன?, நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கபோவது தான் பிரச்சினை.. அரசியலுக்கு வருவது என்று விஜய் முடிவு செய்துவிட்டார்..கட்சி ஆரம்பிப்பதால் பயம் ஏன் வருகிறது என்றும் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான்.. அவருக்கு பயம் இல்லை என்றால் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும்.
ரெட் செயின் மூவிஸ் லியோ திரைப்படத்தை வெளியிடவில்லை, அவர்கள் வாங்கி வெளியிட்டிருந்தால் இசை வெளியீட்டு விழா மற்றும் திரையரங்கில் படம் வெளியாகி இருக்கும். இவை இல்லாததால் தான் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு அரசியல் மக்களுக்கு பிடிக்கவில்லை, தேசிய அரசியல்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை நிறைய படிக்க வேண்டும். இந்தியா என்ற தேசமே இல்லை பல தேசியங்களின் ஒன்றியம் தான் இந்தியா. மாநிலங்களவை தான்... அண்ணாமலை சின்னப்பிள்ளை, நாங்கள் ஐந்து வயதிலிருந்து அரசியல் படித்து வந்து வருகிறோம். திடீரென வந்து பேசி வருகிறார்.அண்ணாமலையைஅமைதியாக அமருங்கள் தம்பி என்று வடிவேல் காமெடியை கூறி கிண்டல் செய்தார்.

மத்தியில் பதவியே இருப்பதால் அண்ணாமலையின் பேச்சு மதிக்கப்படுகிறது. மத்தியில் ஆட்சி இல்லாவிட்டால் எல்லாம் தெரிந்துவிடும் என்றும் விமர்சனம் செய்தார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுடைய தீர்ப்பு என்பது நீண்டநாளாக மாற்றம் வர வேண்டும், மாற்றத்திற்கான வழியே இல்லை.. திமுக, அதிமுக மாறி மாறி வருகிறது. நாம் தமிழர் கட்சி வழியாக வந்தே நிற்கிறது. எங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை வரவேண்டும், அந்த நம்பிக்கை கொடுக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக இருந்து வருகிறது முதல் கட்சியாக வர எவ்வளவு நேரம் ஆகும் விரைவில் நடக்கும் என்றும் நிச்சயம் வெல்வோம் மக்கள் ஒருநாள் எங்களைத் தேடுவர்கள். அதுவரை மக்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்போம். நாம் தமிழர் கட்சி எட்டு கோடி மக்களுடன் மிகப்பெரிய கூட்டணி வைத்துள்ளது. மக்களை முழுமையாக நேசித்து, மக்களை நம்பி தனித்து போட்டியிடுவதாக கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம் என்று முடிவு செய்துள்ளோம். 20 ஆண்கள்,20 பெண்கள் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக கூறினர். ஏறத்தாழ வேட்பாளர்கள் தேர்வு முடிவு பெற்றுவிட்டது.அதிமுக பொதுச்செயலாளர் அழைத்துப் பேசும்போது எங்கள் கொள்கை முடிவு முடியாது என்று கூறிவிட்டதாக பேசினார்.

ஓட்டிற்காக பணம் வாங்குவது மக்கள் பழகிவிட்டார்கள்.இவை ஒழிய வேண்டும், மாற வேண்டும் தற்போது நான் செய்கிறேன், நாளை விஜய் வந்தால் பணம் கொடுக்கமாட்டார்.அதை வலியுறுத்தி பேசுவார். எனக்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது,அவருக்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது பணம் இல்லாமல் வாக்கு செலுத்த முடியும் என்று மக்கள் யோசிப்பார்கள் என்றார்.

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கொடுத்து வெளியே விடுவது நல்லது என்பது தான் என்னுடைய கருத்து. அவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை, ஆட்சி முறையே அவ்வாறு தான் உள்ளது என்று விமர்சனம் செய்தார்‌.

தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடமாட்டார்.
அவ்வாறு போட்டியிட்டால் எதிர்த்து நான் போட்டியிடுவேன்,நிறைய கேள்விகளை கேட்பேன் என்றும் கூறினார்.

கடந்த ஆட்சியின் போது தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி விடுமுறை அறிவித்தார். தமிழர் வரலாற்றில் தைப்பூசத்தில் விடுமுறை அறிவித்தது.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். அதனால் உணர்வு அடிப்படையில் ஒரு நெருக்கம் உள்ளது. தமிழர் என்ற ரத்த உறவு மட்டும்தான், வேறு ஒன்றும் இல்லை.

அதிமுக உடன் கூட்டணி என்பது எனக்கு உடன்படாது. பிரபாகரன் குறித்து பேசும்போது எடப்பாடி பழனிச்சாமி எழுந்து சென்றுவிடுவார். அதனால் அது கடினம் என்றும் கூறினார்.

video Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek