மாவட்டச் செய்தி கோவில்பட்டி

இலவச வீட்டு மனை பட்டா கோரி கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

by admin on | 2023-10-09 21:36:16

Share: | | |


இலவச வீட்டு மனை பட்டா கோரி கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி ஊராட்சி பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு இலவச வீட்டுமனை கேட்டு  விண்ணப்பம் செய்தவர்களில் 53 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தற்போது வரை இடமோ, பட்டாவே வழங்கப்படாமல் உள்ளதாகவும், இதற்கு பின்னர் மனு கொடுத்தவர்களுக்கு இடம் அளவீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி 53 பயனாளிகளுக்கு இடத்தினை அளவீடு செய்து தர வலியுறுத்தி கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek