மாவட்டம் தூத்துக்குடி

பேராயரை கைது செய்ய கோரி ஆட்சியரகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார்

by admin on | 2023-10-09 21:13:25

Share: | | |


பேராயரை கைது செய்ய கோரி ஆட்சியரகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார்

இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்தகுமார் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 9ஆம் தேதி இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பேராயர் காட்பிரே நோபுலை கைது செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டம், இட்டேரியை சேர்ந்த பேராயர் காட்பிரே நோபுல் என்ற கிறித்துவ பாதிரியார், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல டயோசீசனில் உள்ள அவர்களுக்குள்ளான பிரச்சனையில், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் லே செகரட்டரியாக இருக்கும் கிப்சன் என்பவரை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு மேற்படி கிறித்துவ பாதிரியார் காட்பிரே நோபுல் தன்னிடம் வேலை செய்யும் 11ம் வகுப்பு படிக்கும் இந்து ஏழை மாணவனை கொண்டு அவனது அறியாமையை பயன்படுத்தி சிறுவனின் செல்போனிலிருந்து TND NEWS என்ற வாட்ஸ்அப் குருப்பில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் லே செகரட்டரியாக இருக்கும் கிப்ட்சன் என்பவர் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி மற்றும் அவரை தவறாக விமர்சனமும் செய்துள்ளார்.

கிறித்துவ பாதிரியார் காட்ரே நோபுல், முன்னதாகவே சிறுவனின் செல்போன் நம்பரை கோவில் மணி நாசரேத் என்ற பெயரில் TND NEWS என்ற வாட்ஸ்அப் குருப்பின் அட்மின் ஒருவர் மூலம் பதிவேற்றம் செய்து, தவறான விமர்சனங்களை வாட்ஸ்அப் குருப்பில் சிறுவனின் செல்போன் நம்பரில் இருந்து பதிவு செய்த பின்பு அதே அட்மின் மூலம் சிறுவனின் நம்பரை நீக்கி உள்ளனர். இது சம்பந்தமான புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி வடக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, இதற்கு காரணமான கிறித்துவ பாதிரியார் காட்பிரே நோபுலை கைது செய்யாமல் ஒன்றுமறியாத இளஞ்சிறாரான 11ம் வகுப்பு படிக்கும் இந்து ஏழை மாணவனை போலிசார் கைது செய்து உள்ளது. இது கண்டனத்திற்கும், வருத்ததிற்கும் உரியது.

ஆகவே மாவட்ட ஆட்சியர் சிறுவனின் வாழக்கையை மனதில் கொண்டு சிறுவன் மீது பதியப்பட்ட வழக்கைரத்து செய்திட வேண்டியும், கிறித்தவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையில் ஒன்றுமறியாத சிறுவனை ஈடுபடுத்தியது மட்டுமல்லாமல், இவ்வழக்கிற்கு சம்பந்தப்பட்ட கிறித்துவ பாதிரியார் காட்பிரே நோபுலை உடனடியாக கைது செய்ய வேண்டியும் இந்து மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை புகார் மனு அளிக்கப்பட்டது.

video Link ...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek