மாநிலச் செய்தி தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குழந்தை கடத்தல்: பெண் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி

by admin on | 2023-10-06 17:07:34

Share: | | |


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குழந்தை கடத்தல்: பெண் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி

(குழந்தையை கடத்திய பெண் மற்றும் பெற்றோர்)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒன்றரை வயது குழந்தையை  குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு ரதியுடன் திருமணமாகி ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். முத்துராஜும், ரதியும் அவர்களுடைய கடைசி மகன் ஸ்ரீஹரிஷ் உடன் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருப்பதற்காக வந்துள்ளனர். 

அங்கு கோவில் வளாகத்தில் தங்கி இருந்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் அவருடன் நன்றாக பேசி பழகி அவர்களுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் துணிகளை துவைப்பதற்காக நேற்று காலை ஆறு மணிக்கு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். 

நண்பகல் 12 மணி அளவில் சுப்பிரமணியசாமி கோவில் கலையரங்கம் அருகே சுகாதார வளாகத்தில் ரதி துணி துவைத்துக் கொண்டிருந்தார். சோப்பு வாங்குவதற்காக முத்துராஜ் கடைக்கு சென்று உள்ளார். 

அப்போது  குழந்தையை அந்தப் பெண் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துவிட்டு வருவதாக குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அந்தப் பெண் வராததால் கோவில் வளாகத்தில் முத்துராஜ் ரதி தம்பதிகள் தேடி வந்துள்ளனர்.

இதுகுறித்து, ரதி கொடுத்த புகாரின் பேரில் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண், குழந்தையை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பட்டப் பகலில் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek