தேசியம் சென்னை

தமிழக பாஜகவில் நடப்பது என்ன...? ஆட்டம் காணும் அண்ணாமலை : பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு...?

by admin on | 2023-10-02 19:56:36

Share: | | |


தமிழக பாஜகவில் நடப்பது என்ன...? ஆட்டம் காணும் அண்ணாமலை : பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு...?

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு குறித்து கட்சித் தலைமைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை அனுப்பிய நிலையில், அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நடந்து வந்தது. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் அண்ணா குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் அதிமுகவினரை கொதிப்படைய வைத்தது. இதன் விளைவு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக திடீரென அறிவித்தது.

இதனை எதிர்பார்க்காத பாஜக தேசிய தலைமை அதிர்ச்சி அடைந்தது. மீண்டும் கூட்டணியை ஏற்படுத்த பாஜக தேசிய தலைமை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் பேச முயன்றது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக உடனடியாக கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார்.

அதிமுக கூட்டணி முறிவு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்சி தலைமைக்கு அறிக்கை ஒன்றை அளித்தார். அதிமுகவுடனான கூட்டணி முறிவு பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது அதிமுகவுடன் கூட்டணி முறிவு குறித்து பேசியதாக தெரிகிறது. தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek