மாநிலச் செய்தி சேலம்

நடிகர் பிரகாஷ்ராஜ் கன்னடத்துக்கு ஆதரவாகத்தான் பேசுவார்... இயக்குநர் சமுத்திரக்கனி

by admin on | 2023-09-30 22:44:38

Share: | | |


நடிகர் பிரகாஷ்ராஜ் கன்னடத்துக்கு ஆதரவாகத்தான் பேசுவார்... இயக்குநர் சமுத்திரக்கனி

தன்னுடைய தயாரிப்பில் உருவான அப்பா திரைப்படத்திற்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன் என பிரபல திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது, யார் ரிவீவ் சொன்னாலும் நல்ல படம் கண்டிப்பாக ஓடும் , செல்போன் வைத்துள்ள அனைவரும் ரிவீவ் சொல்ல ஆரம்பித்து விட்டனர். ரிவீவ் சொல்வது அவரவர் தனிப்பட்ட கருத்து என்றாலும் போர்தொழில் போன்ற தரமான படங்கள் கண்டிப்பாக ஓடும்.. சென்சார் போர்டில் நான் இதுவரை பணம் கொடுத்தது இல்லை.
ஆனால் அப்பா திரைப்படத்திற்கு டேக்ஸ் ப்ரீ வாங்க பணம் கொடுத்தேன். அரசே எடுக்க வேண்டிய படத்தை நான் செலவழித்து எடுத்தும் பணம் கொடுத்து தான் டேக்ஸ் ப்ரீ வாங்கியது வருத்தம் அளிக்கிறது.

சிறிய பட்ஜெட்திரைப்படங்கள் இன்னும் திரைக்கு வராமல் இருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு ஆண்டுக்கு சுமார் ஆயிரம் படங்கள் வெளியிட முடியாமல் உள்ளது. செல்போனில் கூட படம் எடுக்கலாம் என ஆகிவிட்டது. ஆகையால் இது இப்படிதான் ஆகும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர் காவிரிக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன். ஆனால் தனிமனிதனாக ஒன்னுமே செய்ய முடியாது. நடிகர் சங்கத்திற்குள் இதுவரை போனதில்லை. கர்நாடகாவில் வீட்டை வைத்து விட்டு பிரகாஷ்ராஜ் தமிழகத்திற்கு ஆதரவாக பேசுவாரா? கர்நாடகாவிற்குதான் ஆதரவாக பேசுவார் என்று தெரிவித்தார்.

லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு வீடியோ....

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek