மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி 2 வது சனிக்கிழமை வழிபாடு

by admin on | 2023-09-30 09:13:36

Share: | | |


தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி 2 வது சனிக்கிழமை வழிபாடு

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை விழா நடைபெற்றது.

குருவாயூரப்பன் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

துாத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா கடந்த 23ம் தேதி கோலாகலமாக நடைபெற்றுது.

இந்நிலையில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை விழா இன்று நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கோபூஜை, தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், பின்னர் பெருமாளுக்கு குருவாயூரப்பன் அலங்காரம் செய்யப்பட்டது. குருவாயூரப்பன் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பெருமாள், கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில் குமார், சிவன் கோயில் நிர்வாக அதிகாரி தமிழ் செல்வி, பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி, பாலசங்கர், ஜெயபால், முருகேஸ் வரி மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

மூன்றாவது சனிக்கிழமை பத்மாவதி தாயார் அலங்காரத்திலும், நான்காவது சனிக்கிழமை திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் துாத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek