மாவட்டம் சேலம்

ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை விரைந்து மீட்ட 108 பணியாளர்கள்....

by admin on | 2023-09-29 17:36:45

Share: | | |


ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரை விரைந்து மீட்ட 108 பணியாளர்கள்....

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள டேனிஸ்பேட்டை பகுதி வனப்பகுதியில் ரயிலில் இருந்து நிலை தடுமாறு 50 அடி பள்ளத்தில் விழுந்த நபரை 108 ஊழியர்கள் விரைந்து மீட்டனர்.

சேலம் வழியாக வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி 50 அடி பள்ளத்தில் கீழே விழுந்து உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த 108 பணியாளர்கள் கிரிதரன் மற்றும் ஆசைத்தம்பி உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் 108 வாகனம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை இருந்ததால் காலதாமதம் செய்யாமல் ஸ்ட்ரெச்சரை தூக்கிக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றனர். சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று அங்கு படுகாயம் அடைந்து கிடந்த நபரை மீட்டு இருசக்கர வாகன உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அவருக்கு முதலுதவி செய்து சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த நபரிடம் 24 ஆயிரத்து 10 ரூபாய் பணம் இருந்ததை கண்ட ஊழியர்கள் அதனை பத்திரமாக எடுத்து மருத்துவமனை ஊழியரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உயிருக்கு போராடிய நபரை விரைந்து மிட்டதோடு அவரிடம் இருந்த பணத்தையும் பத்திரமாக ஒப்படைத்த 108 பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கடமையை கண்ணியத்துடன் நிறைவேற்றிய 108 பணியாளர்கள்

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek