மாநிலச் செய்தி சேலம்

பெண்கள் முன்னேற்றம் தான் நாட்டின் வளர்ச்சி- அமைச்சர் உதயநிதி பேச்சு...

by admin on | 2023-09-27 22:28:48

Share: | | |


பெண்கள் முன்னேற்றம் தான் நாட்டின் வளர்ச்சி- அமைச்சர் உதயநிதி பேச்சு...

பெண்கள் அனைவரும் படிப்பதோடு மட்டுமல்லாமல் முற்போக்காக பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மகளிர் உரிமை தொகைக்கான  ஏடிஎம் வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்காண ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சி சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. 

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 500 மகளிருக்கு உரிமை தொகைக்காண ஏடிஎம் கார்டுகளை வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில்தான் அதிக மகளிர்கள் பயனடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் 5,17,000 மகளிர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

 கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இதுவரை அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் முதன்மையான திட்டமாக மகளிர் உரிமை திட்டம் திகழ்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர் கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் மகளிர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கின்றனர். உண்மையை விட பொய்தான் அதிகம் அனைவரையும் சென்றடையும்.

அனைவரும் அரசியல் பேசவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்கள் அமர்ந்துள்ளது திமுகவின் சாதனை என்றார்.

மேலும் பெண்கள் அனைவரும் படிப்பதோடு மட்டுமல்லாமல் முற்போக்காக பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும், பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் வளர்ச்சி
என்று தெரிவித்தார்.

சேலம் மாநாடு குறித்த உதயநிதி பேட்டி ...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek