மாநிலச் செய்தி சேலம்

டெல்லியில் இருந்து ஒரு போன் வந்தால் போதும் - அதிமுக பாஜக கூட்டணி இணைந்து விடும்: அமைச்சர் உதயநிதி

by admin on | 2023-09-27 22:13:11

Share: | | |


டெல்லியில் இருந்து ஒரு போன் வந்தால் போதும் - அதிமுக பாஜக கூட்டணி இணைந்து விடும்: அமைச்சர் உதயநிதி

பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கான முன்னேற்பட்டு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டினை வரும் டிசம்பர் 17-ம் தேதி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடத்த உள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சமையல் பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர் அணி மாநாட்டிற்காக செயல்வீர்ர்கள் கூட்டத்தினை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு இடத்திலும்ஏராளமான இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாநாட்டினை மிகப் பெரிய வெற்றி மாநாடாக இளைஞர் அணியினர் மாற்றிக் காட்டுவார்கள். அதற்கான ஏற்பாட்டினை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு மாநாடு இந்தியாவில் இதுவரை நடந்த்து இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். மாநாட்டில் திராவிட இயக்கத்தின் கொள்கைகள்,திமுக வரலாறு, பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அரசின் சாதனைகள், புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படும்.
 
அதிமுக-பாஜக கூட்டணிப் பிரிவு என்பது உட்கட்சி தகராறுதான். ஆரம்பத்தில் இருந்தே அதை காமெடியாகத்தான் பார்க்கிறேன். மறுபடியும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூப்பிட்டு பேசினால் மீண்டும் கூட்டணி வந்து விடும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேர் டெல்லி எப்படி போனார்கள் எனத் தெரியுமா யாருக்கும் தெரியாமல் குறுக்கு வழியில் சென்றனர்.
இங்கிருந்து கொச்சிக்கு போய், பெங்களூர் போய் டெல்லி சென்றனர்.

நேற்று கூட மூத்த தலைவர்கள் யாரும் பாஜக பற்றி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியதாக கேள்விப்பட்டேன். இதிலிருந்து என்ன தெரிகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள். மக்கள் மீண்டும் ஏமாற மாட்டார்கள். இருதரப்பினரிடையே மோதல் முதல் தடவை அல்ல. மீண்டும் சேர்ந்து விடுவார்கள். ஒரு போன் வந்தால் எல்லாம் முடிந்து விடும். அவர்கள் இணைந்து இருந்தாலும் சேர்ந்து இருந்தாலும் திமுக அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. எங்களுடைய நோக்கம் மக்கள் சேவையாற்றுவதுதான்.
 
திமுக கூட்டணி கடந்த 7 வருடங்களாக இருக்கிறது. இது கொள்கை கூட்டணி என்பதால் தொடர்ந்து நீடிக்கிறது. அதை மிகுந்த சாமர்த்தியமாக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு செல்கிறார். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார் மக்கள் பணியாற்றுகிறார்கள், யார் ஏமாற்றுகிறார்கள் என்று. மக்களே முடிவு செய்வார்கள் யார் வர வேண்டும் என்று.. சிஏஜி அறிக்கையில் ரூ.7.5 லட்சம் கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி செலவு செய்திருக்கிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ஏற்கனவே இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 9 ஆண்டுகால பாஜக அரசின் ஊழல் தொடர்ந்து வெளியே வந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதத்தில் பாரதிய ஜனதாக் கட்சி மற்றவர்களை பற்றி பொய் பிரசாரம் செய்து வருகிறது.
அடுத்த முறை பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்காது. இதற்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் துணை நிற்பார்கள் என்றார்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களிடையே மிகப்பெரிய புத்துணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.செல்லும் இடமெல்லாம் தேடி வந்து நன்றி சொல்கிறார்கள். 99 சதவீதம் நன்றாக இருக்கிறது. ஒரு சதவீதம் சில இடங்களில் குறையும் சொல்கிறார்கள். விண்ணப்பத்திற்கு பதில் வரவில்லை என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை முதலமைச்சர் தந்துள்ளார். விண்ணப்பித்த 80 சதவீதம்பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
 
காவிரி பிரச்சினையில் எப்போதும் உரிமைகளை விட்டுத், தரமாட்டோம். கண்டிப்பாக காவிரி நீரைப் பெறுவோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உணர்வு கொள்கை இருக்கும். நம்முடையதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என சொல்ல முடியாது. அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகள் அனைத்தும் விட்டுக் கொடுக்கப்பட்டது. அதைப் போல திமுக எந்தக் காலத்திலும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காது.

முதலமைச்சரின் புகைப்படத்தை வைத்து அநாகரீகமான முறையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போராட்டம் கண்டிக்கத்தக்கது என்றார் பேட்டின் போது நடராஜ் நிர்வாக துறை அமைச்சர் கே நேரு எம்பிக்கள் எஸ் ஆர் பார்த்திபன் சிகாமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இணைந்தாலும் பிரிந்தாலும் திமுகவுக்கு கவலை இல்லை...
 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek