மாவட்டம் தூத்துக்குடி

கருவாடு மீன் ஆகாது!... பி.ஜேபி தமிழகத்துக்கு ஆகாது... தூத்துக்குடியில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.

by admin on | 2023-09-25 22:31:46

Share: | | |


கருவாடு மீன் ஆகாது!... பி.ஜேபி தமிழகத்துக்கு ஆகாது... தூத்துக்குடியில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.

பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுகவை வரவேற்று தூத்துக்குடி சிவன்கோவில் தேரடி முன்பு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி அறிவித்தார்.

இதை வரவேற்று தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி சிவன்கோவில் தேரடி முன்பு முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமையில் திரண்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நோட்டாவை விரட்டி அடிக்கும் அதிமுக என தொண்டர்கள் உற்சாகமாக மிகுதியில் கோஷமிட்டனர்.

மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி 39 வது வட்டக் கழகச் செயலாளர் மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான திருச்சிற்றம்பலம், துணைச் செயலாளர் டைகர் சிவா ஆகியோர் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதாக அதிமுக அறிவித்ததை வரவேற்று தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதைப்போன்று Notaவின் போட்டியாளர்களுக்கு டாட்டா காட்டிய கழக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் என தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்பி சண்முகநாதன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டராலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

video Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek