மாநிலச் செய்தி கோவில்பட்டி

பாஜக அதிமுக கூட்டணி முறிவை வரவேற்கிறோம்: மதிமுக துரை வைகோ

by admin on | 2023-09-25 21:45:26

Share: | | |


 பாஜக அதிமுக கூட்டணி முறிவை வரவேற்கிறோம்: மதிமுக துரை வைகோ

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை அதிமுக முறித்ததை வரவேற்கிறோம் என்று கோவில்பட்டியில் துரை வைகோ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மை பொது செயலாளர் துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசுகையில், மத்திய ரெயில்வே துறை சென்னை - நெல்லை வரை வந்தே பாரத் இயக்குவதாக அறிவித்த போது தென்தமிழக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அது இயங்கும் வழித்தடம் அறிவிப்பு வந்த போது பொதுமக்கள் மற்றும் வைகோவிற்கு பெரும் ஏமாற்றம் தந்தது.

அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை கடிதம் எழுதிய வைகோ, ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். மக்கள் பிரச்சினைகளுக்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

இதையடுத்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை அதிமுக முறித்ததை வரவேற்கிறோம். அனைத்து திராவிட கட்சிகளும் இணைந்து தமிழகத்திலிருந்து மதவாத பாரதிய ஜனதா கட்சியை விரட்டுவோம். கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவில்லை என்றால் அடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Durai Vaiko Video Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek