மாநிலம் சென்னை

தியாகராய நகரில் தனியார் ஜவுளி குடோனில் திடீர் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் செலவிலான துணிகள் சேதம்

by admin on | 2023-09-25 08:46:30

Share: | | |


தியாகராய நகரில் தனியார் ஜவுளி குடோனில் திடீர் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் செலவிலான துணிகள் சேதம்

தியாகராய நகரில் சிவஞானம் சாலையில் பிரபல ஜவுளிக்கடை போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. 

 இங்கு அதிகாலை 5.30 மணி அளவில் இரண்டாவது மாடியிலிருந்த குடோனில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டதை கண்ட காவலாளி உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

சம்பவம் அறிந்த தியாகராய நகர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அசோக் நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து நிலையில் சுமார் அரை மணி நேரத்தில் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய தியாகராய நகரில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 மின்கசிவு காரணமாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலானது.

சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek