மாநிலச் செய்தி தூத்துக்குடி

தருவைகுளம் அதிதூதர் மிக்கேல் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது...!

by admin on | 2023-09-20 23:18:10

Share: | | |


தருவைகுளம் அதிதூதர் மிக்கேல் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது...!

தருவைகுளம் அதிதூதர் மிக்கேல் ஆலய பெருவிழா கொடியேற்றம் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி தருவைகுளம் வான் படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு திருப்பவனி நடைபெற்றது. தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து நவநாள் திருப்பலி நடக்கிறது. வருகிற 26ம் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கோடி அற்புதரின் சப்பர பவனி, தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 29ம் தேதி காலை 6.00 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா நிறைவு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

பெருவிழா வீடியோவைக் காண இங்கே க்ளிக் பண்ணுங்க...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek