தேசியம் டெல்லி

நீங்க என்ன பேசினாலும் புரியாது... எதுக்கு புரியாம பேசுற... சீறிப்பாய்ந்த சிங்கப்பெண்...

by admin on | 2023-09-20 18:22:40

Share: | | |


நீங்க என்ன பேசினாலும் புரியாது... எதுக்கு புரியாம பேசுற... சீறிப்பாய்ந்த சிங்கப்பெண்...

சமூக வலைத்தளங்களில் ஒன்றான X பக்கத்தில் #KanimozhiKarunanidhi என்ற ஹேஷ்டேக் (hashtag) தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி எம்.பி உரையாற்றினார்.மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா குறித்து பல குற்றச்சாட்டுகளை ஒன்றிய பாஜக அரசு மீது வைத்தார்.

முன்னதாக கனிமொழி பேச தொடங்குவதற்கு முன்பே பாஜகவினர் கூச்சலிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இது தான் பாஜகவினர் பெண்களை மதிக்கும் முறையா என்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியது இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்ற சூழலில், #KanimozhiKarunanidhi என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

video Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek