மாநிலம் சென்னை

பாஜகவுடன் இனி அதிமுக கூட்டணி் இல்லை - அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை: டி.ஜெயக்குமார் எச்சரிக்கை

by admin on | 2023-09-18 17:42:39

Share: | | |


பாஜகவுடன் இனி அதிமுக கூட்டணி் இல்லை - அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை: டி.ஜெயக்குமார் எச்சரிக்கை

வடசென்னை ராயபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பேட்டி விவரம்: அண்ணாமலை தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள அந்தர் பல்டி அடிக்கிறார். அம்மா பற்றி பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு அண்ணா வரலாற்றை பற்றி பேசுகிறார். அறிஞர் அண்ணாவை சிறுமை படுத்திய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தோம். அடுத்து பெரியாரை இழிவு படுத்துகிறார்.

பெரியார் அடிவாங்குவதை சொல்வேன் என்கிறார். கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுகிறார். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும். அண்ணாமலைக்கு கொடுத்த பதவி தகுதிக்கு மீறிய பதவி.பாஜக தலைவர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர். அதிமுக சிங்க கூட்டத்தை பார்த்து சிறுநரி போல் அண்ணாமலை ஊலையிடுகிறார். தனித்து நின்றால் நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்குவாரா. பெரியாரைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது.

கூட்டணி கட்சியை விமர்சனம் செய்யும் அண்ணமலையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அண்ணாமலையை தாருமாறாக விமர்சனம் செய்வோம். சிருமை புத்தியை பற்றி சமூக வலைதளத்தில் பதிவிடுவோம். அண்ணாமலை செயலால் தேர்தலில் எப்படி கூட்டணி கட்சியினர் வேலை செய்வார்கள். அதிமுகவுடன் கூட்டணியை அண்ணாமலை விரும்பவல்லை.பாஜக தொண்டர்கள் விரும்புகிறர்கள். பாஜக கலூன்ற முடியாத நிலை இருந்தது. அதிமுகவை வைத்து தான் அடையாளம் கண்டார்கள்

அதிமுக இனி பாஐகவுடன் கூட்டணி் இல்லை. அடுத்த முடிவு தேர்தல் வரும்போது தான் முடிவு செய்வோம். அண்ணாமலை தலைவர்களை  விமர்சனம் செய்தால் கடுமையான விளைவுகளை சந்தக்க நேரிடும் என்றார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி முழு வீடியோ பதிவைக் காணுங்கள்...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek