மாவட்டம் தூத்துக்குடி

வெண்டைக்காய் கிலோ 3 ரூபாய்: தொடரும் விலை வீழ்ச்சி - வேதனையில் விவசாயிகள்

by admin on | 2023-09-16 21:26:12

Share: | | |


வெண்டைக்காய் கிலோ 3 ரூபாய்: தொடரும் விலை வீழ்ச்சி - வேதனையில் விவசாயிகள்

ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு கைலாசபுரத்தில் பகுதியில் வெண்டைக்காய் சாகுபடி செய்த விவசாயிகள்,போதிய விலை கிடைக்காமல், வேதனையுடன் கால்நடைகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே, வடக்கு கைலாசபுரம் உள்ளிட்ட ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கருக்கும் மேலாக வெண்டைக்காய் பயிரிட்டு வருகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் வெண்டைக்காய் தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வரலாறு காணாத அளவில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

வழக்கமாக ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகமாக இருப்பதாலும், வரத்து அதிகமாக இருப்பதாலும் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வடக்கு கைலாசபுரத்தை சேர்ந்த விவசாயி கைலாசம் கூறுகையில், எங்கள் பகுதியில் பல ஏக்கரில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளோம். முறையாக நீர் பாய்ச்சி, உரம் வைத்து பேணியதால் விளைச்சல் அதிகமாக இருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட வெண்டைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

வியாபாரிகள் எங்களிடமிருந்து ஒரு கிலோ வெண்டைக்காய் 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இது வெண்டைக்காய் வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்கள் வைத்து வெண்டைக்காய் பறிப்பவர்களுக்கு கூலி வழங்க முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளோம், இதனால் வெண்டைக்காயை பறிக்காமல் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கண்ணீருடன் தெரிவி்த்தனர்.

எனவே தமிழக அரசு வெண்டைக்காய் உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசின் பசுமை பண்ணை காய்கறி கடைகள் மற்றும் கூட்டுறவு காய்கறிகள் அங்காடி மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

video Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek