மாநிலச் செய்தி தூத்துக்குடி

அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜகவுக்கு அழைத்தோமா... கூறுவது நம்புற மாதிரியா இருக்கு ...? -நாராயணன் திருப்பதி

by admin on | 2023-09-16 20:44:11

Share: | | |


அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜகவுக்கு அழைத்தோமா... கூறுவது நம்புற மாதிரியா இருக்கு ...? -நாராயணன் திருப்பதி

பாரதிய ஜனதா கட்சியில் செந்தில் பாலாஜி போன்றவர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும் செய்தி தொடர்பாளருமான நாராயண திருப்பதி தெரிவித்தார்.

தமிழக பாரதிய ஜனதாகட்சியின் மாநில துணைதலைவரும் செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி செப்.16ம் தேதி இன்று தூத்துக்குடி மச்சாது நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் 2024 ஆம் ஆண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என்ற அவர் இதனால் நேர விரையும் பணம் விரையும் வரும் பல மாநிலங்களில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தேர்தல் வருவதால் திட்டங்கள் பாதிக்கப்படுகிறது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய குந்தகம் விளைகிறது. அமைச்சர்கள் ராணுவம் உள்ளிட்ட பலரின் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியில் செந்தில் பாலாஜி போன்றவர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். கண்டக்டர் வேலை, கிளீனர் வேலை வாங்கி தருவதாக கூறி காசு வாங்கிய நபர் சாதாரண மக்களிடம் ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி என அவர் குற்றம் சாட்டினார். நாடு எரிசக்தி துறையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டு 2030 க்கும் 500 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்க வேண்டும் என்ற வேட்கையோடு எதிர்பார்ப்போடு இருக்கக்கூடியவர் என்றார்.

ஆனால் செந்தில் பாலாஜி ஒரு மின்சாரம் தயாரிக்க அப்ளிகேஷன் கொடுக்க வந்தவரிடம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் பெற்றவர் என அவர் குற்றம் சாட்டினார். இவரை பாஜகவிற்கு வாங்க என அழைப்பது நம்பும்படியாக உள்ளது என்றார். தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Video Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek