மாநிலம் சென்னை

மீண்டும் மக்கள் ஆதரவோடு அதிமுக ஆட்சிக்கு வரும்: அதிமுக பொதுச்செயலாளர் EPS ஆருடம்...!

by admin on | 2023-09-15 20:26:54

Share: | | |


மீண்டும் மக்கள் ஆதரவோடு அதிமுக ஆட்சிக்கு வரும்: அதிமுக பொதுச்செயலாளர் EPS ஆருடம்...!

தாம்பரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர்,முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு முழு விபரம்:

இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. 2011-21 வரை அம்மா அவர்கள் ஆட்சியில் தான் மக்களுக்கு நன்மை கிடைத்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டமாக உருவாக்கப்பட்டது. நான் கொண்டு வந்த திட்டம் என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்னும் திறக்கவில்லை. இது தான் திமுக அரசின் லட்சனம்.

கடைக்கோடி தொண்டனுக்கும், மக்களுக்கும் திட்டம் போய் சென்றது. 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்தோம். உங்களால் இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியை கொண்டு வர முடிந்ததா?. அரசுப்பள்ளி மாணவர்களும் டாக்டராகும் வாய்ப்பை அதிமுக அரசுதான் பெற்றுத் தந்தது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படுகிறது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர். மக்கள் உரிமைக்காக அதிகமான போராட்டத்துக்கு அனுமதி கொடுத்து பாதுகாப்பு கொடுத்தோம். அதிமுக பொதுக்கூட்டத்துக்கே இப்போது அனுமதி தருவதில்லை.

மீண்டும் மக்கள் ஆதரவோடு அதிமுக ஆட்சிக்கு வரும். எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.ஆர்.எஸ்.பாரதி என்மீது வழக்கு போட்டார். அந்த வழக்கு நீர்த்துபோனது. லஞ்ச ஒழிப்பு துறை திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இந்த ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சுதந்திர தினத்தன்று கொடியேற்றக்கூட முடியவில்லை. சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், பால் விலை உயர்ந்தது.

கொள்ளையடிப்பதிலேயே குறிக்கோளாக இருக்கின்றனர். 4 லட்சத்து 15 ஆயிரம் கோடி அதிமுக அரசு கடன் வைத்ததாக சொன்னார்கள், திமுக அரசு ஆண்டபோது ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி வைத்ததன் விளைவாகத்தான் அதிமுக அரசுக்கு கடன் அதிகரித்தது.

தேர்தல் என்கிற போர் தொடங்கி விட்டது. அனைவரும் ஒன்றிணைந்து எதிரிகளை புறமுதுகு காட்டி ஒடச் செய்ய வேண்டும். எனப் பேசினார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek