மாவட்டம் சேலம்

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவினர் !

by admin on | 2023-09-12 17:45:44

Share: | | |


பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவினர் !

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம், கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் இடங்கனசாலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

கொங்கணாபுரம் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் கரட்டூர் மணி ஏற்பாட்டில், திமுகவை சேர்ந்த மகுடஞ்சாவடி முன்னாள் முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் டி.சி.ராஜேந்திரன், கொங்கணாபுரம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பி.வி.விஜய், மகுடஞ்சாவடி முருகன்,

காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் செல்வம், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சரவணன், அ.புதூர் ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் சாந்தி செங்கோடன், செய்யூர் கிளை செயலாளர் முருகேசன், அ.புதூர் கிளை செயலாளர் பழனியப்பன், பொன்னையன் கோவில் கிளை செயலாளர் கருப்பண்ணன் உள்பட மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்குட்பட்ட 27 கிளையை சேர்ந்த கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் என 250க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

புதியதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது, சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சவுந்திரராஜன், மகுடஞ்சாவடி ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தன், அ.புதூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அதிமுகவில் இணைந்தவர்கள் ... வீடியோவை காண...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek