மாவட்டச் செய்தி கோவில்பட்டி

பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கைது...!

by admin on | 2023-09-11 21:59:41

Share: | | |


பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கைது...!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அமைச்சர் சேகர் பாபு பதவி விலக கோரி பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் , பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பாதலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் திரளான பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.

நீதிமன்ற விநாயகர் கோவிலில் இருந்து கட்சிக் கொடிகளுடன் ஊர்வலமாக வந்த பாரதிய ஜனதா கட்சியினரை கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே நடுவழியில் தடுத்து நிறுத்தினர்.அப்போது அங்கு போலீசாருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek