மாவட்டச் செய்தி கோவில்பட்டி

விளாத்திகுளம் அருகே கார் டிக்கியில் அடைத்து ஒருவர் எரித்து படுகொலை... கொலையாளி யார்.?

by admin on | 2023-09-08 07:14:30

Share: | | |


விளாத்திகுளம் அருகே கார் டிக்கியில் அடைத்து ஒருவர் எரித்து படுகொலை... கொலையாளி யார்.?

தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில், மர்மமான முறையில் கார் டிக்கியில் ஒருவர் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் 7 ம் தேதி மாலை 6.30 மணியளவில், சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கும், குளத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காரின் அருகில் சென்று பாரத்தபோது, காரின் பின்பக்க டிக்கியில் ஆணா? பெண்ணா? என்று அடையாளம் காணமுடியாத வகையில் சடலம் பாதி எரிந்து கருகிய நிலையில் எரிந்து இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் உடனடியாக தீயை அணைத்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரிடையாக வந்து காரில் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை பார்வையிட்டு தனிப்படை அமைத்து இறந்த நபர் யார்?, குற்றவாளிகள் யார்! என உடனடியாக கண்டுபிடிக்க உத்தரவிட்டார். 

தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் கார் டிக்கியிலிருந்து பாதி எரிந்த நிலையில் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்ததில், கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை வைத்து இறந்த நபர் ஆண்தான் என்பதை உறுதி செய்தனர். 

போலீசார் தீப்பற்றி எரிந்த காரின் நம்பரை (TN64 F1587) வைத்து காரின் உரிமையாளர்  நாகஜோதி என்பதைக்கண்டறிந்தனர். 

அதுமட்டுமின்றி சம்பவ இடத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செல்போனை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மகன் 

நாகஜோதி என்ற 48 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காரில் அவரது டிரைவருடன் சென்ற நிலையில் காணவில்லை என அவரது குடும்பத்தினரால் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இதனால் போலீசார் கார் டிக்கியில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் ஆண் நாகஜோதிதான் என உறுதி செய்து கொலை செய்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek