மாநிலச் செய்தி சேலம்

சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தினர் 6 பேர் உயிரிழந்த சோகம்!

by admin on | 2023-09-06 09:11:29

Share: | | |


சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தினர் 6 பேர் உயிரிழந்த சோகம்!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஈங்கூர் குட்ட பாளையம் பகுதியை சேர்ந்தவர்  பழனிச்சாமி இவரது மனைவி பாப்பாத்தி இவரது மகள் பிரியா.

பிரியாவுக்கும் சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டுதெரு பகுதியை சேர்ந்த சேலம் மாநகராட்சி ஓட்டுநர் காளியப்பன் மகன் ராஜதுரைக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று அவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு பெண் குழந்தையும் இருந்தது.

நேற்று இரவு பழனிச்சாமி தனது குடும்பத்துடன் சேலத்தில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு வேனில் சென்று விட்டு பெருந்துறைக்கு இவரது மகள் பேத்தியுடன் அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தனர்.

 அப்போது சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத வேன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில்  பழனிச்சாமி, அவரது மனைவி பாப்பாத்தி, பாப்பாத்தி அண்ணன் மகன் ஆறுமுகம், அவரது மனைவி மஞ்சுளா, இவரது உறவினர் செல்வராஜ், 

பிரியா-ராஜதுரை மகள் சஞ்சனா, உள்ளிட்ட ஆறு பேர் பலத்த காயமடைந்ததில் நிகழ்வு இடத்திலேயே அனைவரும் உயிரிழந்தனர்.

பழனிச்சாமி பாப்பாத்தி மகளும் ராஜதுரை மனைவியுமான பிரியா, வேன் ஓட்டுநர் ஆறுமுகம் மகன் விக்னேஷ், ஆகியோர் சிகிச்சைக்காக சங்ககிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சம்பவம் அறிந்த சங்ககிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஆறு பேரின் பிரேதங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.ஓட்டுனரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில்தெரியவந்துள்ளது. மேலும் அதிகாலை நேரத்தில் தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டும் போது இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதற வைக்கும் சிசிடிவி காட்சி...Click Here

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek