மாநிலச் செய்தி கோவில்பட்டி

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் | கொள்ளுப்பேத்தி வேண்டுகோள்!

by admin on | 2023-09-05 21:49:30

Share: | | |


வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் | கொள்ளுப்பேத்தி வேண்டுகோள்!

நாடாளுமன்றத்தில் வ உ சிதம்பரனாருக்கு வெண்கலச் சிலை வைக்க வேண்டும்  எனவும் அவரது பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் கொள்ளுப்பேத்தி செல்வி கோரிக்கை வைத்துள்ளார்.

செக்கிழுத்தச் செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 152 வது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ வ.உ. சி யின் கொள்ளுப்பேத்தி செல்வி தனது வீட்டில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். 

பின்னர் செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில் : கிள்ளி குளத்தில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும்  ஆராய்ச்சி மையத்திற்கு வ உ சி யின் பெயரை சூட்டிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நேரத்தில் வ உ சி குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், பாராளுமன்ற வளாகத்தில் வ.உ. சிதம்பரனாரின் முழு உருவ வெண்கல சிலையை நிறுவ மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட வேண்டும் மேலும்
 செப் 5 வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் முன்னாள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் முருகானந்தம், மருத்துவர் கபிலாஸ் போஸ், மோனிஷா, மாரிச்செல்வம், சோமசுந்தரம், வழக்கறிஞர் நாகராஜ் ,பாண்டியன் முத்துக்குமார் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek