மாநிலச் செய்தி சேலம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் | கனகராஜன் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி!

by admin on | 2023-09-05 17:29:51

Share: | | |


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் | கனகராஜன் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் என்று சொல்லப்படும் கனகராஜ் அண்ணன் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறும் போது முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கோடநாட்டில் நடந்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்த ஒன்று இந்த விஷயத்தில் என்னுடைய தம்பி கனகராஜ் விபத்துக்குள் ஆனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது ஆனால் அதில் உண்மை இல்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரிவித்தார்.

தன்னை கைது செய்யப்பட்ட போது தன்னை விசாரித்த அதிகாரி தன்னை முறையாக நடத்தவில்லை என்றும் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் எழுதிக் கொடுத்த பேப்பரிலேயே கையெழுத்து போட்டதாகவும், தான் எதையும் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார் .

தற்போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு தயாராக உள்ளதாகவும் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் தான் வாக்குமூலம் அளிக்க தயார் என்றும் தெரிவித்தார். கனகராஜ் கொலை வழக்கில் கொடநாட்டில் இருந்து 25 கோடி ரூபாய் கனகராஜ்க்கு கொடுப்பதாக ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐந்து பெரிய பைகளை எடுத்து வந்து கொடுத்ததாகவும் தெரிவித்தார். பணத்தை பட்டுவாட செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் வெளிப்படையாக தெரிவித்தார்.

சிபிசிஐடி விசாரணைக்கு தான் தயாராக இருப்பதாகவும் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வரப்போவதாக தெரிவித்தார். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு உள்ளது என்றும் இதில் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு கீழ் 30 பேர் கொண்ட குழு செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.

கோடநாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட ஆவணங்களை வைத்து தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர்களையும் விசாரணை உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோடநாடு கொலை கொள்ளை...நடந்தது என்ன? மனம் திறக்கும் கனகராஜ் சகோதரர்

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek